Friday, October 4, 2013

Tuesday, September 3, 2013

Jalan Kayu

Road near jalan kayu

Thursday, August 13, 2009

பெப்சி அன்று முதல் இன்று வரை..

1898 ஆண்டு முதல் பெப்சி நிறுவன சின்னத்தின் மாற்றங்கள்..

கொக்க கோலா அன்றும் இன்றும் அப்படியே மாறாமல் உள்ளது.

Wednesday, August 12, 2009

உலகின் மிகச்சிறந்த 10 விமான நிறுவனங்கள்

10. British Airways



இங்கிலாந்து நாட்டில் இருந்து இயக்கப்படும் இந்நிறுவனம் மார்ச் 31, 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மொத்தம் 229 விமானங்களை கொண்டு 150 நகரங்களுக்கு பயணிக்கிறது. 2006 ஆம் ஆண்டு முதல் இடத்தில் இருந்த இந்நிறுவனம் பொருளாதார சரிவு காரணமாக இவ்வாண்டு 10 ஆம் இடத்தில்..

9. Emirates



துபாய் நாட்டில் இருந்து இயக்கப்படும் இந்நிறுவனம் அக்டோபர் 25, 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மொத்தம் 130+ விமானங்களை கொண்டு 101 நகரங்களுக்கு பயணிக்கிறது. மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 28,037. மத்திய கிழக்கு நாடுகளின் மிகச்சிறந்த விமான நிறுவனமாகும். விமான பணிபெண்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்பது இதன் சிறப்பு.

8. China Airlines



தைவான் நாட்டில் இருந்து இயக்கப்படும் இந்நிறுவனம் 1959 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மொத்தம் 66 விமானங்களை கொண்டு 75 நகரங்களுக்கு பயணிக்கிறது. 2006 ஆம் ஆண்டு பத்தாம் இடத்தில் இருந்த இவ்வாண்டு 8 ஆம் இடத்தில்.

7. Air New Zealand


நியூஸிலாந்து நாட்டின் இந்நிறுவனம் 1940 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மொத்தம் 100+ விமானங்களை கொண்டு 53 நகரங்களுக்கு பயணிக்கிறது. ஆக்லாந்து இதன் தலைமையகம்.

6. Malaysia Airlines


மலேசியா நாட்டின் இந்நிறுவனம் 1947 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மொத்தம் 85+ விமானங்களை கொண்டு 111 நகரங்களுக்கு பயணிக்கிறது. கோலாலம்பூர் இதன் தலைமையகம். சிறந்த விமான பணி பெண்களுக்கான விருதையும் பெற்றுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஒன்பதாம் இடத்தில் இருந்த இவ்வாண்டு 6 ஆம் இடத்தில்.

5. Qantas Airways



ஆஸ்திரேலியா நாட்டின் இந்நிறுவனம் 1920 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மொத்தம் 133+ விமானங்களை கொண்டு 37 நகரங்களுக்கு பயணிக்கிறது. இதன் துணை நிறுவனமான ஜெட் ஸ்டார் உலகின் சிறந்த குறைந்த கட்டண விமான நிறுவனமாகும். 2006 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த இவ்வாண்டு 5 ஆம் இடத்தில்.

4. Qatar Airways


கத்தார் நாட்டில் 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் வளர்ச்சி அபாரமானது. 66+ விமானங்களை கொண்டு 88 நகரங்களுக்கு பயணிக்கிறது. சிறந்த முதல் வகுப்பு விமான விருதையும் பெற்றுள்ளது.

3. Cathay Pacific


ஹோங் காங் நாட்டில் 1946 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்றது. மொத்தம் 122+ விமானங்களை கொண்டு 55 நகரங்களுக்கு பறக்கிறது. 2006 ஆம் ஆண்டில் முதல் இடத்தில் இருந்த இந்நிறுவனம் பொருளாதார விழ்ச்சி காரணமாக இவ்வாண்டு 3 ஆம் இடத்தில் உள்ளது.

2. Thai Airways


தாய்லாந்து நாட்டில் 1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பாங்காக்கை மையமாக கொண்டு இயங்குகிறது. மொத்தம் 91+ விமானங்களை கொண்டு 71 நகரங்களுக்கு பறக்கிறது. 2006 ஆம் ஆண்டில் நான்காம் இடத்தில் இருந்த இந்நிறுவனம் இவ்வாண்டு 2 ஆம் இடத்தை பிடித்துள்ளது

1. Singapore Airlines


சிங்கப்பூர் நாட்டில் 1947 ஆம் ஆண்டு (Malayan Airways) தொடங்கப்பட்டது இந்நிறுவனம். மொத்தம் 108+ விமானங்களை கொண்டு 65 நகரங்களுக்கு பறக்கிறது. உலகின் மிகப்பெரிய விமானமான AirBus A380 இயக்கிய முதல் நிறுவனம் என்ற பெருமைக்கு உரியது. கனிவுடன் சேவை புரியும் இந்நிறுவனம் ஆண்டுக்கு மொத்த சிங்கப்பூர் மக்கள் தொகையை விட அதிகமான பயணிகளை ஏற்றி செல்கிறது.